×

வெயில் காலத்தை சமாளிக்க சில வழிமுறைகள்

நன்றி குங்குமம் தோழி

* தினம் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இதனால் இரைப்பை, சிறுநீரகம், ஆகியவற்றில் வரும் நோயை தவிர்க்கலாம்.
* மஞ்சள் காமாலைக்கும் வெயிலுக்கும் அண்ணன் தம்பி உறவு மாதிரி. இதைத் தவிர்க்க கறும்புச்சாறு குடிக்க வேண்டும்.
* களைப்படையாமல் அலுவலகத்தில் இருக்க அலுவலகம் போகும் போது எலுமிச்சம் சாறு, இஞ்சிச் சாறு கலந்த மோர் சிறிது உப்பு கலந்து எடுத்துச் சென்று அவ்வப்போது குடியுங்கள்.
* வெயில் காலத்தில் விதவிதமான கீரை கிடைக்கும். வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் குளிர்ச்சி பெறும்.
* வெந்தயம் முளைகட்டி வைத்து தினமும் சாப்பிடலாம்.
* ஊறவைத்த வெந்தயத்துடன் நெல்லிக்காய் ேசர்த்து அரைத்து தலையில் தேய்த்து ஊறியபின் குளியுங்கள். உடல் உஷ்ணம் நீங்கும்.
* மாதுளம் பிஞ்சு அல்லது தோலை (பழத்தின்) அரைத்து மோரில் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் வரும் வயிற்று உபாதை தீரும்.
* வியர்வையால் ஏற்படும் சளி, இருமலுக்கு சிறந்த வைத்தியம் சீர்-அகம் எனும் சீரகத்தை லேசாக வறுத்து பொடித்து நீரைக் கொதிக்க வைத்துப் போட்டுக் குடியுங்கள்.
* இளநீர் மிகவும் நல்லது. இளநீர் விற்கும் விலையில் எல்லோராலும் முடியாத விஷயம். இரவில் வடித்த சாதத்தை (பழையது) சட்டியில் போட்டு உப்பிட்டு கசக்கி விட்டு மறு நாள் வெறும் வயிற்றில் குடியுங்கள். தேவாம்ருதம் இதுதான்.
* வேப்பம் பூவை எடுத்து தேனில் ஊறவைத்து உண்பது வயிற்றுக்கு ஆரோக்யம். வெயில் காலத்துக்கு அருமருந்து.
* வியர்வையால் தண்ணீர் வெளியேறி விடுவதால், அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்.

– சரோஜா ரங்கராஜன், சென்னை.

பெண்களுக்கு பயன் தரும் நுங்கு!

வெயில் காலத்தில் தெருவெங்கும் தர்பூசணி, கிர்ணி போன்ற பழங்கள் விற்பனையில் இருக்கும். அதேபோல் நுங்கினையும் ஒரு பாத்திரத்தில் வைத்து பெண்கள் வழி எங்கும் விற்பதைக் காணலாம். குறிப்பாக ெநடுஞ்சாலையில் இதனை விற்பார்கள். இவ்வாறு வெயில் காலத்தில் அதிக அளவில் கிடைக்கும் நுங்கு உடலுக்கு குளிர்ச்சியினை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

* நுங்கு சாப்பிட்டால் தாகம் தணிந்து, நீர்ச்சத்து இழப்பு அபாயத்தை தடுக்கிறது. உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்கிறது. உடலுக்கு ஆற்றலை தருகிறது.
* வயிற்று பிரச்னை, செரிமானக் கோளாறுகளை நீக்குகிறது.
* வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரை குடித்த பிறகு இரண்டு நுங்குகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் காணாமல் போகும். குடல் இயக்கத்தை சீராக செயல்பட வைக்க நுங்கு உதவுகிறது.
* வெள்ளைப்படுதல் காரணமாக சிரமங்களை சந்திக்கும் பெண்களுக்கும் சரும பாதுகாப்புக்கும் நுங்கு அருமருந்தாகும்.
* மார்பக புற்று நோய் வராமல் தடுக்க உதவும். நுங்கில் தோசயனின் என்னும் வேதிப் பொருள் உள்ளது. இது புற்று நோய் செல்கள் மற்றும் அது உருவாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது
* நுங்கு சாப்பிடுவதால் உடல் பருமன் குறைகிறது. மேனி பளபளப்பாகிறது.

– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

The post வெயில் காலத்தை சமாளிக்க சில வழிமுறைகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கனவு மெய்ப்பட வேண்டும்!